Homeஉள்நாடுகுட்டி சபைகளில் அதிகாரத்துக்காக கீரியும், பாம்பும் ஓரணியில்!

குட்டி சபைகளில் அதிகாரத்துக்காக கீரியும், பாம்பும் ஓரணியில்!

” அரசாங்கத்தின் பயணத்துக்கு இடையூறு விளைவிப்பதற்கு குழுவொன்று முற்படுகின்றது. அக்குழுவின் திட்டத்தை நிச்சயம் தோற்கடிப்போம்.” – என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன சூளுரைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” 151 உள்ளாட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி தூய்மையான ஆட்சியை அமைத்துள்ளது. ஏனைய சபைகளிலும் நிச்சயம் ஆட்சி ஸ்தாபிக்கப்படும். இன்று அதிகாரத்துக்காக கீரியும், பாம்பும் ஒன்று சேர்ந்துள்ளன. எனினும், தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்ற 266 சபைகளிலும் இன்னும் ஒரு வார காலத்துக்குள் நிச்சயம் ஆட்சியமைப்போம்.

நாட்டில் சட்டம் உரிய வகையில் செயற்படுகின்றது. எவரேனும் உதவ முற்பட்டால் காலைவாராமல் இருப்பதே பெரும் உதவியாக அமையும்.

நாம் ஆட்சியேற்கும்போது பல சவால்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றாக தீர்க்கப்பட்டுவருகின்றன. மக்கள் எதிர்பார்க்கும் நிலைக்கு நாட்டைக் கொண்டுவருவோம்.
அனைத்து துஷ்ட சக்திகளும் ஒன்றிணைந்துள்ளன. அந்த சக்திகளை ஒன்றாகவே தோற்கடிப்போம்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular