Homeஉள்நாடுசெம்மணி மனித புதைகுழி: சர்வதேச கண்காணிப்பு வேண்டும்!

செம்மணி மனித புதைகுழி: சர்வதேச கண்காணிப்பு வேண்டும்!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுகள் சர்வதேச கண்காணிப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என வட,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி வலியுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள ஆக்கப்பட்டோரின் உறவுகளினுடைய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

‘ காலத்துக்கு காலம் பல்வேறு மனித புதை குழிகள் கண்டு கண்டுபிடிக்கப்பட்டு அகழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை அவ்வாறே கைவிடப்படுகின்றன.

எனவே, இவ்வாறான அகழ்வு பணிகள் ஒரு சர்வதேச கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் ஊடகவியலாளர்கள், காணாமலாக்கப்பட்டவர்கள் சார்பிலும் அவர்களது பிரதிநிதிகளையும் அனுமதிக்க வேண்டும்.” – எனவும் யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.

அத்துடன், செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிக்கு நீதி கோரி நாளை பிற்பகல் செம்மணி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்க இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular