Homeஉலகம்ரஷ்யாவின் 12 கி.மீ. பாலத்தை தகர்த்தியது உக்ரைன்

ரஷ்யாவின் 12 கி.மீ. பாலத்தை தகர்த்தியது உக்ரைன்

ட்ரோன்களை அனுப்பி, ரஷ்யாவின் விமானப்படை தளங்களில் தாக்குதல் நடத்தி, 30 விமானங்களை தகர்த்த உக்ரைன், அடுத்த நடவடிக்கையாக, ரஷ்யாவின் முக்கிய பாலத்தை குண்டுகள் வைத்து தகர்த்துள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022ல் ரஷ்யா தொடர்ந்த போர், மூன்று ஆண்டைக் கடந்தும் தொடர்கிறது.

போர்நிறுத்த பேச்சுகள் தோல்வி அடைந்த நிலையில், ரஷ்யாவின் மீது உக்ரைனின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.

சமீபத்தில், 117 ட்ரோன்களை ரஷ்யாவின் பல பகுதிகளுக்கு அனுப்பி, ஐந்து விமானப்படை தளங்களை குறி வைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

இதில், ரஷ்ய விமானப்படையின், 30 போர் விமானங்கள் தகர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது இந்தப் போரின் மிகப்பெரிய சேதமாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையே, உக்ரைனிடம் இருந்து, 2014ல் ரஷ்யா கைப்பற்றிய கிரீமியாவையும், ரஷ்யாவையும் இணைக்கும் வகையில், 12 கி.மீ., துார பிரமாண்ட பாலம் உள்ளது.

கிரீமியன் பாலம் என்றும் கெர்ச் பாலம் என்றும் இது அழைக்கப்படுகிறது. இதில், ஒரு பக்கம் ரயில் போக்குவரத்துக்கும், மறுபக்கத்தில் சாலை போக்குவரத்தும் நடந்து வந்தது.

இந்நிலையில், நீருக்கடியில், பாலத்தின் துாண்களின் அடியில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை இயக்கி, உக்ரைனின் உளவு அமைப்பான, எஸ்.பி.யு., நேற்று தாக்குதல் நடத்தியது. இதில், பாலத்தின் பெரும்பகுதி தகர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த, ஒரு மாதமாக திட்டமிட்டு, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, எப்.பி.யு., கூறியுள்ளது. இந்த தாக்குதலுக்கு, 1,100 கிலோ எடையுள்ள வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அது கூறியுள்ளது.

இந்த தாக்குதலில், பாலம் மட்டுமல்லாமல், அதை தாங்கி நிற்கும் துாண்களும் கடுமையாக சேதமடைந்து உள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular