Homeஉள்நாடுகொழும்புடனான உறவை வலுப்படுத்துகிறது கன்பரா!

கொழும்புடனான உறவை வலுப்படுத்துகிறது கன்பரா!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், ஆஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை பொருளாதார ரீதியில் நிலையான பயணத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஊழல் மற்றும் மோசடியை ஒழிக்க தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் ரிச்சர்ட் மார்ல்ஸை தெளிவுபடுத்தினார்.

கடந்த காலத்தில் சமுத்திரப் பாதுகாப்பு, சட்டவிரோத வர்த்தகம், ஆள் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் ஆயுதக் கடத்தலைத் தடுக்கும் செயற்பாடுகளுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் வழங்கிய உதவிகளை இதன்போது ஜனாதிபதி பாராட்டினார்.

சுற்றுலா, முதலீட்டு நடவடிக்கைகளுக்கு இலங்கை மிகவும் பாதுகாப்பான நாடு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு சுட்டிக்காட்டினார்.

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான 70 வருட பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளை நினைவுகூர்ந்த பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் , இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்படுவதே தமது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் குறிப்பிட்டார்.

இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை ஆஸ்திரேலிய அரசாங்கம் பாராட்டுவதாகவும், வர்த்தகம், பொருளாதாரம், அரசியல், சுற்றுலா மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை வலுப்படுத்துவது, இந்த விஜயத்தின் நோக்கம் என்றும் ரிச்சர்ட் மார்லஸ் இதன்போது தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular