எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, காலாவதியாகும் தினத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு செல்லுப்படியாகும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மோட்டாா் வாகன சட்டத்துக்கமைய போக்குவரத்து அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் “2021 ஒக்டோபா் மாதம் முதலாம் தினத்திலிருந்து 2022 மார்ச் மாதம் 31 ஆம் திகதி இறுதிவரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சகல சாரதி அனுமதிப் பத்தரங்களினதும் செல்லுப்படியாகும் காலம் காலாவதியான தினத்திலிருந்து ஆறு மாத காலப்பகுதிக்கு நீடிக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.