Homeஉலகம்ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டரில் 6.1 ஆக பதிவு

ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் நிலநடுக்கம் – ரிக்டரில் 6.1 ஆக பதிவு

ஜப்பானின் வடக்கே அமைந்துள்ள முக்கிய தீவுப் பகுதியான ஹொக்கைடோவில் இன்று (மே 31) பிற்பகல் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் (ஜே.எம்.ஏ) தெரிவித்துள்ளது.

ஜப்பானின் வடக்கே அமைந்துள்ள நாட்டின் 2-வது பெரிய தீவுப் பகுதியான ஹொக்கைடோவில் சனிக்கிழமை (மே 31) பிற்பகலில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 20 கி.மீ (12 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் ஹொக்கைடோவின் கிழக்கு கடற்கரையில் இருந்ததாகவும், எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிப்பு குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular