Homeஉள்நாடுகொரோனா அச்சுறுத்தல்: மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனை

கொரோனா அச்சுறுத்தல்: மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனை

புதிய கொவிட்-19 திரிபால் ஏற்பட்டுள்ள உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்திற்கொண்டு, பி.சி.ஆர். பரிசோதனைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் சில வைத்தியசாலகளில் இப்பரிசோதனைகள் மிக மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளதாவது:

கொவிட் தொற்றுக்குள்ளானவர்களைக் கண்டறியும் சோதனைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பி.சி.ஆர். பரிசோதனை வசதிகளுள்ள வைத்தியசாலைகள், தற்போது இந்தச் சோதனைகளைத் துரிதப்படுத்தியுள்ளன.

வைத்தியசாலைகளில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்படும் அல்லது சிகிச்சை பெறும் நோயாளிகள் தொடர்பிலான கண்காணிப்பை அதிகரிக்க வைத்தியசாலைகளுக்குசுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

உலக நாடுகள் சிலவற்றில் தற்போது பரவிவரும் புதிய கொவிட் தொடர்பில் இலங்கை தொடர்ந்தும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கும். ஆனால், உடனடியாக எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது என்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க மேலும் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular