மொரட்டுவை சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்பு தொடரில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீயை அணைக்க 02 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக மொரட்டுவ மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.