Homeஉள்நாடுமாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசுக்கு சவால் விடுப்பு!

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசுக்கு சவால் விடுப்பு!

முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்திக்காட்டுமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சவால் விடுத்துள்ளது.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே முன்னாள் ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன இந்த சவாலை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசாங்கத்தின் செயற்பாடுகளால் அதன் வாக்கு வங்கி சரிந்துவருகின்றது. முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்தி காட்டுமாறு சவால் விடுக்கின்றோம்.

வடக்கில் நினைவேந்தல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில்கூட நடத்தப்பட்டுள்ளது. ஆனால் படையினருக்குரிய கௌரவத்தை இந்த ஆட்சியாளர்கள் வழங்கவில்லை.

நாம் தமிழர்களுக்கு எதிராக போர் செய்யவில்லை. நாட்டு மக்களுக்கு வாழ்வதற்குரிய சூழ்நிலை இருக்கவில்லை. எனவே, மக்களை பாதுகாப்பதற்காகவே போர் செய்யப்பட்டு, சுதந்திரம் பெறப்பட்டது. இந்நிலைமையை அரசாங்கம் சீர்குலைக்க கூடாது.

பொய்களை சமூகமயப்படுத்தியதால் ஏற்படும் பிரதிபலன்களை இந்த அரசாங்கம் விரைவில் உணரும்.” – என்றார் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular