Homeஉள்நாடுதேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட   சபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட   சபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் வவுனியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள வன்னிப் பிளாசா விடுதியில் இன்று இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது வவுனியாவில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் மற்றும் விகிதாசார உறுப்பினர்கள் கலந்துகொண்டு தமது சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வு கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனின் முன்னிலையில் இடம்பெற்றது.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வவுனியா மாவட்டத்தில் உள்ள சபைகளில் 26 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular