நாளை (08) காலை 08 மணி முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 08 மணி வரை நீர்கொழும்பு – புத்தளம் ரயில் பாதையின் குறுக்கு வீதியின் வாகன போக்குவரத்து முற்றாக தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரன புகையிரத நிலையத்திற்கும் இடையிலிருக்கும் குறுக்கு கடவையின் திருத்தப்பணிகள் காரணமாக இந்த போக்குவரத்து நடவடிக்கைகள் தற்காலிகமாக மூடப்படுவதாக இலங்கை புகையிரத திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.