Homeஉள்நாடுவவுனியாவில் கோர விபத்து: ஒருவர் பலி: மூவர் காயம்!

வவுனியாவில் கோர விபத்து: ஒருவர் பலி: மூவர் காயம்!

வவுனியா, ஓமந்தை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

குடும்ப தலைவர் பலியான நிலையில், அவரது மனைவி, மகன் மற்றும் மாமனார் ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மாவே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார் என தெரியவருகின்றது.

தனது தனிப்பட்ட விஜயமாக வட இந்தியா இமயமலை சாரலுக்கு வழிபாட்டிற்காக சென்று, கட்டுநாயக்கா ஊடாக வருகை தந்து யாழ்ப்பாணத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்த வேளையிலேயே டிப்பர் வாகனத்துடன் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular