Homeஉலகம்இஸ்ரேலுக்கு எதிராக நட்பு நாடுகள் போர்க்கொடி!

இஸ்ரேலுக்கு எதிராக நட்பு நாடுகள் போர்க்கொடி!

இஸ்ரேலுக்கு அதன் நட்பு நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான், கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், காசாவில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் சகிக்க முடியாதது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அரசாங்கம் இந்த மோசமான நடவடிக்கைகளைத் தொடரும் வரை நாங்கள் காத்திருக்க மாட்டோம். இஸ்ரேல் தனது ராணுவத் தாக்குதலை நிறுத்தி, மனிதாபிமான உதவி மீதான கட்டுப்பாடுகளை நீக்காவிட்டால் இஸ்ரேலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுப்போம்.

பொதுமக்களுக்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவியை இஸ்ரேல் தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் செயலாகும்.

இஸ்ரேல் உடனடியாக காசாவிற்கு முழுமையாக உதவியை மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்றும் மேற்படி நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மனிதாபிமான உதவிகளை, காசாவிற்குள் முழுமையாக அனுமதிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular