பிரேசிலில் கோயாஸ் மாநிலத்தின் அபரேசிடா டி கோயானியா நகரில் 68 வயது வயோதிபர் ஒமிக்ரோன் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
குறித்த வயோதிபர் 68 வயதான நுரையீரல் நோய் காரணமாக உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் என அபரேசிடா டி கோயானியா நகர சபையின் தகவல் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான வயோதிபர் மூன்று தடுப்பூசி போட்டவராவார்.
அபரேசிடா டி கோயானியா நகரில் ஒமிக்ரோன் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட 10 நாட்களின் பின்னர் மரணம் நிகழ்ந்ததாக உள்ளூர் சுகாதார செயலகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டன், அவுஸ்திரேலியா, இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலும் ஒமிக்ரோன் தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளன.
பிரேசில் 2 கோடியே 23 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதோடு, 619,641 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.