Homeஉள்நாடுஅரசின் செயற்பாடுகள் குறித்து தமிழர்கள் அதிருப்தி!

அரசின் செயற்பாடுகள் குறித்து தமிழர்கள் அதிருப்தி!

அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வடக்கில் தமிழ் மக்கள் திருப்தி அடையவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் நாமல் ராஜபக்ச மேலும் கூறியவை வருமாறு,

” தமிழ் டயஸ்போராக்கள் அல்லர், புலி டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காக இந்த அரசாங்கம் பல உபாயங்களைக் கையாண்டது.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் திருப்தி அடைந்திருந்தால், உள்ளுராட்சிசபைத் தேர்தலில் வடக்கில் தேசிய மக்கள் சக்தி வென்றிருக்க வேண்டும். அவ்வாறு நடக்கவில்லை. டயஸ்போராக்களின் தேவை நிறைவேற்றப்பட்டு வந்தாலும் ஆளுங்கட்சி தோல்வி அடைந்தது. வடக்கு மக்கள் கூட்டமைப்புக்குதான் வாக்களித்தனர்.

டயஸ்போராக்களும் ஜனாதிபதிமீது வைத்திருந்த நம்பிக்கை தற்போது இல்லாமல்போயுள்ளது. ஏனெனில் எல்லைகள் அற்ற விதத்தில் பொய்கள் கூறப்பட்டன. வடக்கில் ஒரு கதையும், தெற்கில் மற்றுமொரு கதையும் கூறப்பட்டது. முன்பு போல் அல்லாது தற்போது மக்களுக்கு மொழி ஆளுமை உள்ளதால் வடக்கில் ஒன்றையும், தெற்கில் வேறொன்றையும் குறிப்பிட முடியாது. மக்களுக்கு உண்மை என்னவென்பது தெரியும்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular