Homeஉள்நாடுஹரக்கட்டாவின் ரூ. 30 கோடி கதை குறித்து விசாரணை வேட்டை!

ஹரக்கட்டாவின் ரூ. 30 கோடி கதை குறித்து விசாரணை வேட்டை!

கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தில் “ஹரக் கட்டா” வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து குறித்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

“ஹரக் கட்டா” என்றும் அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றவாளியான நதுன் சிந்தக விக்ரமரத்ன,

புதன்கிழமை (14) வழக்கு ஒன்றிற்காக கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோதும், நீதிமன்ற வளாகத்திலிருந்து திரும்ப அழைத்துச் செல்லப்பட்டபோதும், டிரான் அலஸ் மற்றும் தேசபந்து தென்னகோன் குறித்து ஊடகங்களுக்கு இந்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்தார்.

இருவரும் 30 கோடி ரூபா கப்பம் கோரியதாகவும், அது வழங்கப்படாததால்தான் தான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular