Homeஉலகம்பாகிஸ்தானுக்கு துணை நிற்கும் துருக்கி!

பாகிஸ்தானுக்கு துணை நிற்கும் துருக்கி!

பாகிஸ்தான் துருக்கியின் உண்மையான நண்பன் என்றும், அந்நாட்டுக்காக தொடர்ந்து துணை நிற்போம் என்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தத்திற்கு குரல் கொடுத்த துருக்கிக்கு, பாகிஸ்தான் பிரதமர் நன்றி தெரிவித்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

” துருக்கிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சகோதரத்துவம் உண்மையான நட்புக்கு ஒரு சான்றாகும். உலகில் ஒரு சில நாடுகள் மட்டுமே இத்தகைய உறவை பேணுகின்றன. துருக்கியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நாங்கள் விரும்புவது போல, பாகிஸ்தானிலும் அதை விரும்புகிறோம்” எனவும் துருக்கி ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சைகளைத் தீர்ப்பதில் பேச்சுவார்த்தை மற்றும் சமரசத்திற்கு முன்னுரிமை அளிக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் கொள்கையைப் பாராட்டுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular