Homeஉள்நாடுகாணி சுவீகரிப்பை தடுக்க சர்வதேச தலையீடு வேண்டும்!

காணி சுவீகரிப்பை தடுக்க சர்வதேச தலையீடு வேண்டும்!

வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், தையிட்டி விகாரை விவகாரம் என்பன தொடர்பில், சர்வதேச இராஜதந்திரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் உருவாகியிருக்கும் தமிழ்த்தேசிய பேரவையில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது.

பிரிட்டனர் தூதுவர், கனடா தூதவர், இந்திய தூதுவர் ஆகியோருடன் தனித்தனியாக சந்திப்புகள் நடைபெற்றன.

இச்சந்திப்புக்களில் தமிழ்த்தேசிய பேரவையின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன்,
தமிழ்த்தேசியக்கட்சியின் தலைவர் சிறிகாந்தா, தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசனும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் கலந்துகொண்டிருந்தனர்.

இராஜதந்திரிகளுடனான இச்சந்திப்புக்களின் போது பிரதானமாக 3 விடயங்கள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டன.

மேலும் இவ்விடயங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் தலையீடு அவசியம் எனவும், இவைகுறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆராயப்படவேண்டும் எனவும் இராஜதந்திரிகளிடம் வேண்டுகோள்விடுக்கப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular