Homeஉலகம்போப் தோற்றத்தில் ட்ரம்ப்: சர்ச்சையை கிளப்பிய ஏ.ஐ. புகைப்படம்

போப் தோற்றத்தில் ட்ரம்ப்: சர்ச்சையை கிளப்பிய ஏ.ஐ. புகைப்படம்

அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்’ என கூறியிருந்த டிரம்ப் , போப் போல் ஆடை அணிந்த ஏஐ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

குறித்த ஏஐ படமானது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள, 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ், வத்திக்கானில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி காலமானார்.

புதிய போப்பை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு வத்திக்கான் தயாராகி வருகிறது.

இந்த சூழலில், சமீபத்தில் அடுத்த போப் தேர்வு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ” நான் போப்பாக இருக்க விரும்புகிறேன். அதுவே என் முதல் தேர்வாக இருக்கும்.” என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நகைச்சுவையாக பதில் அளித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று போப் உடையில் இருப்பது போன்ற ஒரு ஏஐ புகைப்படத்தை டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular