Homeஉள்நாடுமிகப்பெரிய போர்க் கப்பலை உருவாக்கியது வடகொரியா!

மிகப்பெரிய போர்க் கப்பலை உருவாக்கியது வடகொரியா!

 

மிகப்பெரிய போர்க்கப்பலை உருவாக்கி அதிலிருந்து முதல் முறையாக ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது.
செயற்கை கோள் படங்கள் வாயிலாக இவ்விடயம் தெரியவந்துள்ளது.

வட கொரியா ஜனாதிபதியாக கிம்ஜோங் உன் உள்ளார். இவர் அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் வட கொரியாவின் கடற்படை பலத்தை வலுப்படுத்திட நாட்டின் மேற்கு கடற்கரையில் ஒரு கப்பல் கட்டும் தளத்தில் ஒரு பெரிய கப்பல் உருவாகி வருவது செயற்கை கோள் புகைபடங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.

தலைநகர் பியோங்யாங்கின் தென்மேற்கே 60 கிலோ மீற்றர் தொலைவில் நம்போ கப்பல் கட்டும் தளத்தில் அந்த பெரிய போர்க்கப்பல் தண்ணீரில் மிதப்பது தெளிவாகத் தெரிகிறது.
நேற்று இக்கப்பலிலிருந்து ஏவுகணைகளை வீசி வெற்றி கரமாக சோதனை நடத்தியது. அதனை ஜனாதிபதி கிம்ஜோங் உன் பார்வையிட்டார்.
இந்த போர்க்கப்பல் தற்போதைய கடற்படையில் உள்ள எந்தவொரு கப்பலின் அளவையும் விட இரண்டு மடங்கு பெரியதாக இருக்கலாம் என்றும், கருதப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular