Homeஉள்நாடுஎரிபொருள் விலை குறைப்பு!

எரிபொருள் விலை குறைப்பு!

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 293 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 341 ரூபாவாகும்.

ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 274 ரூபாவாகும்.

சூப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 178 ரூபாவாகும்.

இந்நிலையில், ஐ. ஓ. சி. நிறுவனம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் விலைத்திருத்தத்திற்கேற்ப திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular