Homeஉலகம்தீவிரவாதிகளை வேட்டையாட டில்லிக்கு துணை நிற்கும் வாஷிங்டன்!

தீவிரவாதிகளை வேட்டையாட டில்லிக்கு துணை நிற்கும் வாஷிங்டன்!

 

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை வேட்டையாடுங்கள் என்று அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் ,
‘ காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலால் 26 இந்துக்கள் கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த நேரத்தில் இந்தியாவுக்கு நாங்கள் துணை நிற்போம்.

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்களின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன்.” – என்று குறிப்பிட்டுள்ளார்.

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை இந்தியா வேட்டையாட வேண்டும். நாங்கள் உங்களோடு இருக்கிறோம். உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம்.” என்று துளசி கப்பார்ட் பதிவிட்டுள்ளார்.

பிறப்பால் அமெரிக்கரான துளசி கப்பார்ட், இந்து மதத்தை தீவிரமாக பின்பற்றி வருகிறார். இவர் அமெரிக்க எம்பியாக பதவி வகித்தபோது பகவத் கீதை மீது பிரமாணம் செய்து பதவியேற்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular