Homeஉள்நாடுதொலைபேசி சின்னம் செத்து போன கேஸ்!

தொலைபேசி சின்னம் செத்து போன கேஸ்!

 

” தொலைபேசி சின்னத்துக்கு (ஐக்கிய மக்கள் சக்தி) நாம ஓட்டு போட சொல்லுவமா? அது செத்து போன கேஸ்.” – என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேச சபைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரம் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வெள்ளிக்கிழமை மாலை பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இந்த தேர்தலில் மட்டுமல்ல இனிவரும் தேர்தல்களிலும் அவர்களுடனான (ஐக்கிய மக்கள் சக்தி உடனான) உறவை பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது.

கண்டி மாவட்டத்தில் தனித்து கேட்கும் தீர்மானத்தை எடுத்துள்ளேன். ஒரு சில இடங்களில் வேட்பாளர் களினதும், அமைப்பாளர் களினதும் மன்றாட்டம் காரணமாக 03 இடங்களில் மட்டும் நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் எங்களின் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளோம். 11 இடங்களில் தனித்து களமிறங்கியுள்ளோம்.” – எனவும் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular