Homeஉள்நாடுஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை: 28 ஆம் திகதி இலங்கை வருகிறது மீளாய்வுக்குழு!

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை: 28 ஆம் திகதி இலங்கை வருகிறது மீளாய்வுக்குழு!

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு ஏப்ரல் 28 ஆம் திகதி இலங்கை வருகின்றது.

மே 7 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கி இருக்கும் மேற்படி ஜிஎஸ்பி பிளஸ் கண்காணிப்புக் குழு, முக்கிய சந்திப்புகளை நடத்தவுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள், அரச அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் சந்திப்புகளை நடத்தவுள்ளனர்.

மனித உரிமைகள், தொழில்சார் உரிமைகள், நல்லாட்சி, சுற்றுச்சூழல் உட்பட 27 சர்வதேச விதிமுறைகளை அடிப்படையாகக்கொண்டே மேற்படி வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிவருகின்றது.

மனித உரிமை மீறல் உள்ளிட்ட காரணங்களுக்காக 2010 ஆம் ஆண்டு ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எனினும், 2017 ஆம் ஆண்டு முதல் மீள வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular