Homeஉள்நாடுட்ரம்பின் வரிப்போரை சமாளிக்க வாஷிங்டன் பறக்கிறது உயர்மட்ட தூதுக்குழு!

ட்ரம்பின் வரிப்போரை சமாளிக்க வாஷிங்டன் பறக்கிறது உயர்மட்ட தூதுக்குழு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்துடன் பேச்சு நடத்துவதற்காக உயர்மட்ட தூதுக்குழுவொன்றை வாஷிங்டனுக்கு அனுப்புவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. இதற்கமைய மேற்படி உயர்மட்டக்குழு அடுத்த வாரம் அமெரிக்கா செல்லவுள்ளது என தெரியவருகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உலக நாடுகள்மீது வரிப்போரை தொடுத்துள்ளார். பரஸ்பர வரிகளின் அடிப்படையில் இலங்கை பொருட்கள்மீது 44 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இலங்கையின் ஏற்றுமதி மற்றும் பொருளாதாரத்துக்கு பெரும் தாக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வரி விதிப்பு தொடர்பில் 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சு நடத்த இலங்கை திட்டமிட்டுள்ளது.

இதற்கமைய இரு அமைச்சர்களையும் உள்ளடக்கிய வகையில் உயர்மட்ட குழுவொன்று வாஷிங்டன் செல்லவுள்ளது. உயர்மட்டக்குழு விரைவில் பெயரிடப்படவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular