Homeஉள்நாடுகாதலன் நீரில் மூழ்கி பலி: காதலி உயிர்மாய்ப்பு - யாழில் சோகம்!

காதலன் நீரில் மூழ்கி பலி: காதலி உயிர்மாய்ப்பு – யாழில் சோகம்!

காதலன் நீரில் மூழ்கி பலி: காதலி உயிர்மாய்ப்பு – யாழில் சோகம்!

தாமரைப்பூ பறிக்கும்போது காதலன் நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு, கவலையில் காதலி தவறான முடிவெடுத்து உயர்மாய்துள்ளார்.

யாழ். வரணி பகுதியை சேர்ந்த 18 வயது யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ். தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

குளத்தில் தாமரைபூ பறித்த போது அவர் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
அந்த இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி இன்று அதிகாலை வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

சுட்டிபுரத்திற்கு அருகிலுள்ள குளமொன்றில் இளைஞனின் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular