Homeஉள்நாடுகடலில் தவறி வீழ்ந்த மீனவர் சடலமாக மீட்பு

கடலில் தவறி வீழ்ந்த மீனவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலமுனை நடுத்துறை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தவறி வீழ்ந்து காணாமல்போன மீனவர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பாலமுனையைச் சேர்ந்த 59 வயதுடைய மீனவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி மீனவர் நேற்று திங்கட்கிழமை இரவு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் மீன்பிடித்து விட்டு படகின் ஒரு பகுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது மீனவர் கடலில் தவறி வீழ்ந்து காணாமல்போயுள்ளார்.

இதனையடுத்து காணாமல்போன மீனவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விவாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular