Homeஉலகம்வர்த்தகப் போர்: சீனாவுடன் பேச்சு நடத்த தயார் என்கிறார் ட்ரம்ப்!

வர்த்தகப் போர்: சீனாவுடன் பேச்சு நடத்த தயார் என்கிறார் ட்ரம்ப்!

அமெரிக்காவின் வரிக் கொள்கை சிறப்பாக செயல்படுகிறது என்றும் அமெரிக்காவும் உலகிற்கும் மிகவும் உற்சாகமாக இருக்கிறது என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா பதிலடி கொடுத்து வருகிறது.

சீன பொருட்களுக்கான வரியை அமெரிக்கா தற்போது 145 சதவீதமாக உயர்த்தியுள்ள நிலையில், பதிலுக்கு சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக உயர்த்தி உள்ளது.

உலகின் முதல் இரண்டு பெரிய பொருளாதாரங்களாக அமெரிக்காவும் சீனாவும் இருந்து வரும் நிலையில், அவர்களுக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார மோதல் குறிப்பாக இரு நாடுகளுக்கும் பரவலாக உலக நாடுகளுக்கும் சவால்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தனது வரி விதிப்பு மற்றும் சீனாவுக்கான வரி அதிகரிப்பை ட்ரம்ப் நியாயப்படுத்தி இருக்கிறார்.

அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.

சீனாவின் போட்டி வரி விதிப்பை அடுத்து, முதலீட்டாளர்கள் அமெரிக்க அரசாங்கப் பத்திரங்கள் மீதான தங்கள் முதலீட்டை கைவிட்டுள்ளனர். இதினால், டாலரின் மதிப்பு சரிந்துள்ளது.

இதனிடையே வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட், அமெரிக்கா தாக்கப்படும்போது ; ட்ரம்ப் கடுமையாக பதிலடி கொடுப்பார் என்பது தெளிவாகி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஒருதலைப்பட்ச கொடுமைப்படுத்துதலை எதிர்ப்பதில் பெய்ஜிங்குடன் ஐரோப்பிய ஒன்றியம் கைகோர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular