Homeஉள்நாடுஹாலிஎல பகுதியில் இரு சடலங்கள் மீட்பு!

ஹாலிஎல பகுதியில் இரு சடலங்கள் மீட்பு!

பதுளை, ஹாலிஎல பகுதியில் அடையாளம் தெரியாத இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

ஹாலிஎல நகரிலுள்ள வங்கிக்கு அருகாமையில் 40 வயது முதல் 45 வயது வரை மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம் வடிகானிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஹாலிஎல புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் 50 முதல் 55 வயது வரை மதிக்கத்தக்க மேலுமொரு ஆணின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

இவர்களின் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. நீதவான் சடலங்களை பார்வையிட்டதன் பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலங்கள் பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular