Homeஉள்நாடுசீனாவின் அடிவருடிகளே இந்திய ஒப்பந்தங்களை எதிர்க்கின்றனர்

சீனாவின் அடிவருடிகளே இந்திய ஒப்பந்தங்களை எதிர்க்கின்றனர்

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சரியானவையே எனவும், தமிழர் தாயகத்தில் சீனாவின் நடவடிக்கைகளை அனுமதிக்கபோவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” பாரத பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வந்தார். அவரின் விஜயத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
இந்நிலையில் இந்த நடவடிக்கை சீனாவுக்கு வலிக்கும், அமெரிக்காவுக்கு வலிக்கும் என சீனாவின் அடிவருடிகள் கருத்துகளை கூறிவருகின்றனர்.

இலங்கை நெருக்கடியை எதிர்கொண்டவேளை இந்தியாவே முதலில் உதவியது. எனவே, ஒப்பந்தங்கள் சரியானவை. அவற்றை சீன அடிவருடிகள் குழப்ப முற்பட்டால் நாம் அதனை எதிர்த்து நிற்போம்.

வடக்க, கிழக்கில் சீனாவின் எந்தவொரு நடவடிக்கை இடம்பெறுவதையும் நாம் அனுமதிக்கமாட்டோம்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular