தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு போக்குவரத்து வசதியற்ற மக்களுக்காக 50000 இலவச பயணச் சேவைகளை பெற்றுக் கொடுக்குமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (05) முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கம் (SLRCS) மற்றும் ஊபர் ஸ்ரீலங்கா (UBER SRI LANKA) நிறுவனம் ஆகியன உடன்பாடு தெரிவித்துள்ளன.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் கொவிட் சிகிச்சை பணிகளில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்காக இதுவரை செயற்படுத்தப்பட்டுள்ள இலவச போக்குவரத்து சேவை திட்டத்தின் முன்னேற்றம் குறித்து அறிவிக்கும் கூட்டம் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போதே இந்த உடன்பாடு எட்டப்பட்டது.