Homeஉலகம்இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேற்கு ஆச்சே மாகாணத்தில் இன்று அதிகாலை இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக இருக்கிறது. இதனால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் அறியப்படவில்லை என்று அந்நாட்டின் காலநிலை மையம் அறிவித்துள்ளது.

முதலில் கிடைத்த தகவல்களின் படி, ஜகார்த்தா நேரப்படி அதிகாலை 2.48 மணிக்கு ரிக்டரில் 6.2 ஆக நிலநடுக்கம் பதிவானதாகவும், பின்னர் அது 5.9 ஆக இருந்ததாகவும் காலநிலை மையம் கூறி உள்ளது. பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தாததால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

இதுகுறித்து பேசிய ஆச்சே மாகாண பேரிடர் மேலாண்மை அமைப்பின் மூத்த அதிகாரி ஜோபன் ஏ சின்ஹூவா, தீவுக்கூட்டங்கள் கொண்ட இந்தோனேசியா நில அதிர்வுகள் அதிகம் பதிவாகும் பகுதியில் அமைந்துள்ளது. எனவே பூகம்பங்கள் ஏற்படுகிறது. 127 எரிமலைகள் உள்ளன என்றார்.

தாய்லாந்திலும், மியான்மர் நாட்டிலும் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்தனர்.

இத்தகைய சூழ்நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular