தனியார் துறை ஊழியர்களுக்கும் ஐயாயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளாா்.
அரச ஊழியர்களுக்கான மாதாந்த மேலதிக கொடுப்பனவு ஐயாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்தே, தனியார் துறையினருக்கும் அந்த வாய்ப்பை பெற்றுக்கொடுப்பது இதுதொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.
இதுதொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.