ஆசை வார்த்தைகளைக்கூறி ஆட்சி பீடம் ஏரியவர்கள், இன்று மலையக மக்களை மறந்துவிட்டார்கள் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நோர்வூட் பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு பொகவந்தலாவ தண்டாயுதபாணி ஆலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய திகாம்பரம் மேலும் கூறியவை வருமாறு,
‘ மலையக மக்கள் தொடர்பில் ஆளுங்கட்சியினருக்கு அக்கறை இல்லை என்பது இன்று உறுதியாகி வருகின்றது. தேசிய மக்கள் சக்தியில் உள்ள தமிழ் பிரதிநிதிகளுக்கு மலையக மக்கள் தொடர்பில் அதிகம் பேச முடியவில்லை. ஊழல், மோசடிகள் எனக்கூறிக்கொண்டு மாதாந்தம் பட்டியல்கள் வெளிப்படுத்தப்பட்டுவருகின்றன.
தமிழ் முற்போக்கு கூட்டணியை பொருத்தவரையில் நாங்கள் மக்களுக்கு நேர்மையாக சேவை செய்திருக்கின்றோம். நாங்கள் சுத்தவாளிகள
இந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் எமது தாய் தந்தையரின் பிள்ளைகள் போட்டியிடுகின்றனர். ஆகவே அவர்களுக்கு வாக்களித்து தோட்ட தொழிலாளியின் பிள்ளைகளை உள்ளுராட்சி மன்ற தலைவர்களாகவும், உறுப்பினர்களாகவும் ஆக்கவும்.” – என்றார்.
