Homeஉள்நாடுஎன்னை சிறையில் அடையுங்கள்: மனைவிமீது கை வைத்தால் நடப்பது வேறு!

என்னை சிறையில் அடையுங்கள்: மனைவிமீது கை வைத்தால் நடப்பது வேறு!

“என்னை வேண்டுமானால் எத்தனை தடவை வேண்டுமானாலும் சிறையில் அடையுங்கள். ஆனால் எனது மனைவிமீது கை வைக்க முற்பட்டால், நான் என்ன செய்வேன் என்பது எனக்கு தெரியும்.”

இவ்வாறு அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த.

மொட்டு கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை விட்டு செல்லவில்லை. எனவே, நாமல் ராஜபக்சவுடன் இங்கு வந்திருப்பது புதுமையான விடயம் அல்ல. மஹிந்த ராஜபக்சவுடன் அன்று முதல் இன்று வரை இணைந்து செயல்பட்டுவருகின்றேன். எதிர்காலத்திலும் இதில் மாற்றம் இல்லை.

மஹிந்த ராஜபக்ச இந்நாட்டுக்காக செய்ததை மக்கள் மறந்துவிட்டனர். மஹிந்தவால்தான் நாம் இந்த இடத்தில் நிற்கின்றோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

நாட்டை மீட்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்தோம். கட்சியின் முடிவுக்கமையவே அதனை நாம் செய்தோம்.
என்னையும், எனது மனைவியையும் சிறையில் அடைத்தனர். வெட்கம், இதுவா அரசியல்?” என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular