தாய்லாந்தில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பாங்கொக் செல்கின்றார். அவருடன் பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திரவாவும் செல்கின்றார்.
ஆங்கில வார இதழொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
“வளமான, நெகிழ்ச்சியான மற்றும் வெளிப்படையான பிம்ஸ்டெக்” எனும் தொனிப்பொருளின்கீழேயே 6 ஆவது பிம்ஸ்டெக் மாநாடு ஏப்ரல் 3 முதல் 4 ஆம் திகதிவரை தாய்லாந்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மியன்மார் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் குறித்த மாநாடு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. எனினும், மாநாட்டு திகதியை மாற்றுவது தொடர்பில் இன்னும் மீள்பரிசீலனை செய்யப்படவில்லை.
பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இரு தரப்பு சந்திப்புகளிலும் பங்கேற்கவுள்ளார்.
2018 ஆம் ஆண்டுக்கு பிறகு இம்முறையே பிக்ஸ்டெக் மாநாடு நேரில் நடக்கின்றது. 2022 இல் மெய்நிகர்மூலம் மாநாடு கொழும்பில் நடத்தப்பட்டது.
பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை வருவதற்கு முன்னர் இந்திய பிரதமர் தாய்லாந்து செல்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
