Homeஉள்நாடுபிரிட்டனுக்கு பதிலடி கொடுத்த வசந்த கரன்னாகொட!

பிரிட்டனுக்கு பதிலடி கொடுத்த வசந்த கரன்னாகொட!

“உலகிலேயே மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிய நாடுதான் பிரிட்டன்.” என்று இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரிட்டனால் தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பில் ஊடகமொன்றிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

‘ பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின்போது இலங்கையில் ஊவ, வெல்லஸ்ஸ புரட்சியை ஒடுக்குவதற்காக மக்களை கொலை செய்தனர். தமது செயல் தொடர்பில் பிரிட்டன் வெட்கப்பட வேண்டும்.

இத்தடை தொடர்பில் அரசாங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. அத்துடன் நின்றுவிடாமல் முன்னோக்கி செல்ல வேண்டும். ஏனெனில் போலி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எமது நாட்டுக்கு எதிராககூட தடை விதிக்கப்படக்கூடும்.” – எனவும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மேலும் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular