Homeஉள்நாடுபிரிட்டன் தடையை வைத்து அரசியல் செய்ய எதிரணி முயற்சி!

பிரிட்டன் தடையை வைத்து அரசியல் செய்ய எதிரணி முயற்சி!

” பிரிட்டனின் தடை விவகாரத்தின் பின்னணியில் புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் உள்ளனரா என்பது பற்றியும் ஆராயப்பட்டுவருகின்றது.”
என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

” பிரிட்டனின் தடையின் பின்னால் இலங்கை பின்னணிகொண்ட கனடா அமைச்சர் ஒருவரும் இருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது. எனவே, இது புலி ஆதரவாளர்களால் செய்யப்பட்ட நடவடிக்கையென கருதுகின்றீர்களா” என ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

” இது பற்றியும் நாம் ஆராய்ந்துவருகின்றோம். இப்படியான யோசனைகள் எப்படி வருகின்றன என்பது எமக்கு தெளிவாகின்றது. அது பற்றிய புரிதல் எமக்கு உள்ளது. உலக அரசியல் எவ்வாறு செயல்படுகின்றது என்பதும் எமக்கு தெரியும்.
இலங்கையென்பது சுயாதீன நாடாகும். எனவே, பிரிட்டனால் எடுக்கப்பட்ட ஒரு தலைபட்சமான தீர்மானம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு உரிய வகையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இவ்விடயத்திலும் அரசியல் நடத்துவதற்கு எதிரணிகள் முற்படுகின்றன. அந்த பொறிக்குள் நாம் சிக்கமாட்டோம். நாடு தொடர்பில் சிந்தித்தே செயல்படுகின்றோம்.

சர்வதேசத்துடனான கொடுக்கல், வாங்கலின்போது எமது இராஜதந்திர நிலைப்பாடுகளுக்கமைய செயல்படுவோம்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular