Homeஉள்நாடுஇந்திய மீனவர்கள் 11 பேர் கைது!

இந்திய மீனவர்கள் 11 பேர் கைது!

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகை மடக்கிப் பிடித்த கடற்படையினர், அதிலிருந்த 11 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.

கைதான மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்கள் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular