Homeஉள்நாடுகருணாவுக்காக அல்ல படையினருக்காக அரசு முன்னிலையாக வேண்டும்!

கருணாவுக்காக அல்ல படையினருக்காக அரசு முன்னிலையாக வேண்டும்!

” கருணா அம்மானுக்காக அல்ல, படையினருக்காக அரசாங்கம் முன்னிலையாக வேண்டும்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

பிரிட்டனின் தடை விதிப்பு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” போரை முடிப்பதற்கு பங்களிப்பு வழங்கியவர்களுக்கு தடை விதிப்பதை ஏற்கமுடியாது. இது விடயத்தில் அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும். இராணுவத்துக்காக அரசாங்கம், நாடு என்ற வகையில் முன்னிலையாக வேண்டும், படையினருக்காக அது நடக்கவேண்டும், கருணா அம்மானுக்காக அல்ல.
மனித உரிமைகள் பிரச்சினையை இராஜதந்திர ரீதியில் தீர்க்க வேண்டும். அதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவளிக்கப்படும்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular