Homeஉள்நாடுமனோஜ் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு பெருந்திரளானோர் அஞ்சலி!

மனோஜ் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு பெருந்திரளானோர் அஞ்சலி!

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மறைந்த மனோஜ் பாரதி உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மனோஜ் பார​தி​ராஜா மாரடைப்பு காரண​மாக நேற்று உயி​ரிழந்​தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் வீட்டில் அஞ்சலிக்காக மனோஜின் உடல் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய், நடிகர் சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular