Homeஉள்நாடுலுணுகலையை சேர்ந்தவர் உள்நாட்டு துப்பாக்கியுடன் கைது!

லுணுகலையை சேர்ந்தவர் உள்நாட்டு துப்பாக்கியுடன் கைது!

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று மாலை (23) கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

64 வயதுடைய கலராவ வெரகொட பல்லேகீருவ லுணுகலை பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

லுணுகலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்ட போது குறித்த நபரின் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர் .

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இன்றைய (24) பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular