இலங்கைக்கு அந்நிய செலாவணிகளை கொண்டுவரும் ஊழியர்கள் அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் 240 ரூபாய் வழங்க வேண்டும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவத்துள்ளார்.
அதற்கான நடவடிக்கைகளை திரைச்சேறி மேற்கொள்ள வேண்டும். நாடு முகம் கொடுத்துள்ள டொலர் நெருக்கடிக்கு உள்ள சிறந்த தீர்வு அதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் டொலருக்கு அவ்வாறான அதிக பணம் வழங்கப்பட்டால் மக்கள் நிச்சயமாக சரியான முறையில் பணத்தை அனுப்புவார்கள்.
உண்டியல் முறையில் பணம் அனுப்பும் பழக்கத்தில் இருந்து அவர்களை விடுபட வைக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
இதனால் நாங்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கான சிறந்த பலனை பெறுமவதற்கு திரைச்சேறி நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.