இலங்கை வங்கிகளில் உள்ள டொலர் கணக்குகளை உள்ளூர் நாணயங்களாக மாற்றுமாறு இலங்கை மத்திய வங்கி, வர்த்தக வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு கலங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான பிரசாரங்கள் வெளியாகி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கை வர்த்தக வங்கிகளில் உள்ள வெளிநாட்டு நாணய வைப்பாளர்களின் கணக்குகளில் உள்ள வைப்புத்தொகைகளில் 25% உள்ளூர் நாணயங்களுக்கு மாற்றப்பட வேண்டும் என மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Rumors spread by some mischievous elements that Sri Lankan #banks have been ordered by @CBSL to forcibly convert balances in their customers' #Forex accounts are totally false. #SriLanka #Fakenews
— Ajith Nivard Cabraal (@an_cabraal) January 5, 2022