Homeஉள்நாடுஊரை ஆளும் அதிகாரத்தையும் எங்களிடம் தாருங்கள்: வடக்கு மக்களிடம் அமைச்சர் சந்திரசேகர் கோரிக்கை

ஊரை ஆளும் அதிகாரத்தையும் எங்களிடம் தாருங்கள்: வடக்கு மக்களிடம் அமைச்சர் சந்திரசேகர் கோரிக்கை

நாட்டை ஆள்வதற்கு வழங்கிய அதேபோன்றதொரு ஆணையை ஊரை ஆள்வதற்கும் வடக்கு மக்கள் வழங்குவார்களென்ற உறுதியான நம்பிக்கை உள்ளது என்று அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

எதிர்வரும் மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சிசபைத் தேர்தலில் யாழ்.மாநகரசபை உட்பட யாழ்.மாவட்டத்திலுள்ள 17 சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் தேசிய மக்கள் சக்தி சார்பில் இன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வேட் மனு தாக்கலின் பின்னர், ஊகடங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர்,

” நாங்கள் ஆட்சிப்பீடத்திற்கு வந்து மூன்று மாதங்கள் கடந்துள்ளது. இந்த காலப்பகுதியில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம். இம்முறை பாதீட்டின் மூலம் கிராமங்களுக்கும், யாழ்.மாவட்டத்திற்கும் அதிகமான நிதி ஒதுக்கீடும் செய்துள்ளோம்.” என்று குறிப்பிட்டார்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து கடுகளவேணும் மாற மாட்டோம். யாழ். மாவட்டத்தில் இருக்கின்ற எல்லா சபைகளையும் கைப்பற்றி அதன் ஊடாக எமது சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். எனவே, யாழ். மாவட்ட மக்கள் சிந்தித்து திசைக்காட்டிக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
அத்தோடு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.” என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular