Homeசெய்திநுவரெலியாவில் வேட்பு மனு தாக்கல் செய்தது NPP!

நுவரெலியாவில் வேட்பு மனு தாக்கல் செய்தது NPP!

உள்ளுராட்சி மன்ற  தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தேசிய மக்கள் சக்தியினர் (20.03.2025) இன்று காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 01 மாநகர சபை, 02 நகர சபைகள் மற்றும் 08 பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை நுவரெலியா மாவட்ட தேர்தல் அதிகாரி திருமதி துஷாரி தென்னகோன் முன்னிலையில் கையளித்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன உள்ளிட்ட பலர் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular