Homeஉள்நாடுஇன்று வேட்பு மனு ஏற்பு: ஏப்ரல் 26 தேர்தல்?

இன்று வேட்பு மனு ஏற்பு: ஏப்ரல் 26 தேர்தல்?

336 உள்ளுராட்சிசபைகளுக்குரிய தேர்தல் திகதி இன்று மதியம் தேர்தல் ஆணைக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
உள்ளுராட்சிசபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை நேற்று மதியத்துடன் நிறைவுபெற்றது.

இந்நிலையில்இன்று வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும். நண்பகல் 12 மணியுடன் வேட்புமனு ஏற்பு நிறைவுபெறும். ஆட்சேபனைக்கு ஒரு மணிநேரம் வழங்கப்படும்.

அதன்பின்னர் தேர்தல் ஆணைக்குழுவால் ஊடக சந்திப்பு ஊடாக தேர்தல் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு 35 நாட்களுக்கு பிறகே தேர்தலுக்குரிய நாள் அமைய வேண்டும். அந்தவகையில் ஏப்ரல் 26 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படக்கூடும் என தெரியவருகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular