Homeஉள்நாடுயாழ். மேயர் வேட்பாளராக களமிறங்கும் 'தங்கம்'!

யாழ். மேயர் வேட்பாளராக களமிறங்கும் ‘தங்கம்’!

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தினார்.

யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத் தில் நேற்று அவர் கட்டுப்பணம் செலுத்தினார். இதன்போது அர்ச்சுனா எம்.பி. கருத்துத் தெரிவிக்கையில்,

“ இந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்கி லுள்ள அனைத்து உள்ளுராட்சி சபைகளிலும் சுயேச்சைக் குழுவாக போட்டியிடவுள்ளோம். இதற்கமைய யாழ்ப்பாணத்தில் உள்ள 5 உள்ளுராட்சி சபைகளுக்கு முதற்கட்டமாகக் கட்டுப் பணத்தைச் செலுத்தியிருக்கின்றோம்.

ஏனெனில் உள்ளுராட்சி சபைகளுக் ன கட்டுப்பணம் செலுத்துவதற்கு ம்மிடம் போதிய நிதி இல்லாததால் பாட்டியிடும் வேட்பாளர்களிடமே அற்கான நிதியை வழங்குமாறு கூடக் கட்டிருக்கின்றோம்.
அவ்வாறு அவர்கள் வழங்குமிடத்தே அந்த நிதியை நாம் மீண்டும் வர்களிடம் கொடுப்போம் என்பதையும்அவர்களுக்குத் தெரிவித்தும் இருக்கின்றோம்.

எமக்கான பணம் வந்த பின்னர் அந்த நிதியை நிச்சயம் அவர்களிடமே
வழங்குவோம். இதனடிப்படையில் வடக்கு, கிழக்கு முழுவதும் உள்ள சபைகளுக்கு தொடர்ந்தும் நாம் கட்டுப்பணத்தைச் செலுத்தவுள்ளோம். இவ்வாறு அனைத்து சபைகளுக்கும் கட்டுப்பணத்தைச்
செலுத்தி சகல இடங்களிலும் தேர்தலில் போட்டியிடுவோம்.

இதேவேளை, யாழ். மாநகர சபை யின் மேயர் வேட்பாளராக எனது செயலா ளர் சட்டத்தரணி கௌசல்யாவை நிறுத்தவுள்ளோம். எங்களிடம் ஒழித்து மறைக்கும் எண்ணமோ, சிந்தனையோ இல்லை.

ஆகவே, வடக்கு, கிழக்கில் சகல சபைகளிலும் நாம் போட்டியிடுகின்ற
போது தமது முழுமையான ஆதரவை மக்கள் வழங்க வேண்டும். அவ்வா
றாக மக்கள் தமது ஆதரவை எமக்கு வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்
றோம்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular