Homeஉள்நாடுபஸ் விபத்தில் 21 பேர் காயம்!

பஸ் விபத்தில் 21 பேர் காயம்!

புத்தளம், ஆராச்சிக்கட்டு, பத்துலு ஓயா இன்று இடம்பெற்ற விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

இபோச பஸ்ஸொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியைவிட்டு விலகி கடையொன்றுக்கு அருகில் இருந்த பாரிய மரத்துடன் மோதியுள்ளது.

நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில், பஸ்ஸில் பயணித்த பயணிகள் மற்றும் கடையிலிருந்த குழந்தை உட்பட 21 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் சிலாபம் மற்றும் முந்தல் ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular