Homeஉள்நாடுபொகவந்தலாவயில் கணவனும், மனைவியும் சடலங்களாக மீட்பு!

பொகவந்தலாவயில் கணவனும், மனைவியும் சடலங்களாக மீட்பு!

பொகவந்தலாவை, தெரேசியா தோட்ட பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கணவனும், மனைவியும் இன்று (16) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, சடலங்கள் இருப்பதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர். பின்னர் பொகவந்தலாவை பொலிஸாருக்கு தகவலை வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொகவந்தலாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலங்களுக்கு அருகாமையில் நஞ்சு போத்தலொன்று இருந்துள்ளது எனக் கூறப்படுகின்றது.

சடலமாக மீட்கப்பட்ட பெண் சிறிது கொழும்பு பகுதியில் கூலி தொழில் செய்து வந்ததாகவும் கொழும்பில் இருந்து தனது வீட்டுக்கு வருகை தந்து நான்கு நாட்கள் கடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததோடு இந்ந இரண்டு சடலங்கள் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

38 வயது கணவனும், 37 வயதான மனைவியுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இருவரின் சடலங்களும் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular